உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / மேட்ரிமோனி செயலியில் பெண் குரலில் பேசி ரூ.24.19 லட்சம் மோசடி ஐதராபாத் இளைஞர் கைது

மேட்ரிமோனி செயலியில் பெண் குரலில் பேசி ரூ.24.19 லட்சம் மோசடி ஐதராபாத் இளைஞர் கைது

நாகர்கோவில்: மேட்ரிமோனி செயலி மூலம் பழகி பெண் குரலில் பேசி குமரி மாவட்ட இன்ஜினியரிடம் 24.19 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐதராபாத் இளைஞரை போலீசார் கைதனர். கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரை குளம் பகுதியைச் சேர்ந்த இஞ்ஜினியர திருமணத்துக்காக மேட்ரிமோனி செயலிகள் மூலம் பெண் தேடினார்.செயலி ஒன்றில் வெளியாகி இருந்த பெண்ணின் புகைப்படமும், அதிலிருந்த விபரங்களும் பிடித்திருந்ததை தொடர்ந்து அந்த செயலியில் தனது விவரங்களை பதிவு செய்த பின் அதில் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். எதிர் முனையில் பெண் குரலில் பேசியவர் தனக்கும் விபரங்கள் பிடித்துள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் அலைபேசியில் பேசிபழகினர்.பெண் குரலில் பேசியவர் தான் கிரிப்டோ டிரேடிங் செய்து வருவதாகவும், அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறினார். இதை நம்பிய இஞ்ஜினியர் பலமுறை 24 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். அதன் பிறகு தான் அவர் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் குமரி மாவட்ட எஸ்.பி., யிடம் புகார் அளித்தார்.சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அலைபேசி அழைப்புகள் மற்றும் செயலி அனைத்தும் ஐதராபாத்தில் இருந்து வந்தது தெரிய வந்தது. ஐதராபாத் சென்ற போலீசார், பாக் ஆம்பர் பேட்டை பகுதியைச் சேர்ந்த மேடப் பள்ளி சுதாகர் 26, என்பவரை கைது செய்தனர்.அவரை நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்திய பின் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை