உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / சுற்றுலா தகவல் பலகையில் தவறான தகவல்கள் சுற்றுலா பயணிகள் குழப்பம்

சுற்றுலா தகவல் பலகையில் தவறான தகவல்கள் சுற்றுலா பயணிகள் குழப்பம்

கன்னியாகுமரி : கன்னியாகுமரி புதிய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா தகவல் பலகையில் இடம் பெற்றுள்ள தவறான தகவல்களால் சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை அறிந்துகொள்ளும் வகையில் கன்னியாகுமரியில் பல இடங்களில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை டிஜிட்டல் தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதால் இரவிலும் எளிதாக அறியும் வகையில் உள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக உள்ளது.கன்னியாகுமரி புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் ஜங்ஷன், சன்னதி தெரு, சர்ச் ரோடு ஜங்ஷன் உளிட்ட பல இடங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.சுற்றுலா பயணிகளின் வசதிக்கு வைக்கப்பட்டுள்ள தகவல் பலகைகளில் தவறான தகவல்களும் உள்ளன. குறிப்பாக புதிய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் தூரம் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சுசீந்திரம் 6 கி.மீட்டர் என்றும், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வட்ட கோட்டைக்கு 13 கி.மீட்டர் தூரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வட்டகோட்டைக்கான தூரத்தை சுசீந்திரத்திற்கும், சுசீந்திரத்திற்கான தூரத்தை வட்டக்கோட்டைக்கும் போட்டுள்ளனர்.இதனால் சுசீந்திரம் ஆறு கி.மீட்டர் தானே ஆட்டோவில் செல்லலாம் என்றால் ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே சுற்றூ பயணிகள் நலன் கருதி அமைக்கப்படும் தகவல் பலகைகளில் சரியான தகவல்களை இடம் பெற செய்து குழப்பங்களை தவிர்க்க சுற்றுலா தறை நடவடிக்கை எடுக்குமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
அக் 05, 2025 18:24

ஒரே நிகழ்வினை பல பேர் ஒரே நேரத்தில் விசாரணை செய்தால் அது செத்துப் போகும். SIT விசாரணை பலன் தர இன்னமும் நம்புவோம் ஒரு நபர் விசாரணை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஊடக, செய்தியாளர்கள் மற்றும் கட்சிகளின் விசாரணை குழு அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே பிரேதப் பரிசோதனை உட்பட பல சாட்சியங்கள் அழிந்து போயிருக்க/குழம்பிப் போயிருக்க வாய்ப்புண்டு. தமிழக அரசு தடுமாறுகிறது. சிறையிருந்தே ஆட்சி செய்த செல்வரின் கோட்டை என்பதால், அங்கே இளமை வேகத்தில் "மாஸ்" காட்டிய காரணத்தால், இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல என்பதில் சந்தேகமில்லை


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ