மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
புதுக்கடை:முளமூட்டுக்கடவு ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் மாயமானதால் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.விளாத்துறை கிராம பஞ்., சிற்கு உட்பட்ட குன்னத்தூரை சேர்ந்தவர் கனகராஜ்(53). இவருக்கு பூமதி(50) என்ற மனைவியும், சுரேஷ்(28) முருகன்(26) என்ற மகன்களும் உள்ளனர். சுரேஷ் காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். முருகன் கூலித்தொழில் செய்து வருகிறார்.கனகராஜ் கேரளாவில் கூலிவேலை செய்து வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன் இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இவருடன் வேலைக்கு சென்றவர்கள் கனகராஜை வீட்டிற்கு அழைத்து வந்தனர். குடும்பத்தினர் இவரை சொந்த ஊரில் உள்ள ஆஸ்பத்திரியில் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.நேற்று காலை முளமூட்டுக்கடவு ஆற்றில் கனகராஜ் குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் நீச்சலடித்து கொண்டிருந்த போது திடீரென மூழ்கியதாக கூறப்படுகிறது. அப்போது ஆற்றில் குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் காலையில் குளிக்க சென்ற தந்தையை காணவில்லை என கூறி மகன்கள் இருவரும் முளமூட்டுக்கடவு வந்தனர்.அப்பொழுது முளமூட்டுக்கடவு ஆற்றில் மூழ்கியது கனகராஜ் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து விளாத்துறை பஞ்., தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் மணிகண்டதாஸ் தலைமையில் இளைஞர்கள் தேட துவங்கினர். பிற்பகல் வரை தேடியும் பலன் இல்லாததால் குழித்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியகுமார் தலைமையில் வீரர்கள் முளமூட்டுக்கடவில் தேடுதலில் ஈடுபட்டனர். மாலை வரை உடல் கிடைக்கவில்லை. தேடுதல் பணி தொடர்ந்து நடந்தது.
24-Sep-2025 | 1