மேலும் செய்திகள்
போலீஸ் விரித்த வலையில் சிக்கிய கஞ்சா வியாபாரி
21-Jul-2025
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்தனர் மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லுாரி அருகே போலீசாரை பார்த்த ஒருவர் ஓட முயற்சி செய்தார். அவரைப் பிடித்து விசாரித்த போது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவர் வசிக்கும் மார்த்தாண்டம் செட்டிச்சாறு பகுதிக்கு சென்ற போது அவரது வீட்டில் மாடியில் தொட்டியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் துாத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் கிருஷ்ணன் 27, என்பது தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
21-Jul-2025