உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / அனந்தபுரி ரயில் மீது கல் வீசியவர் கைது

அனந்தபுரி ரயில் மீது கல் வீசியவர் கைது

நாகர்கோவில் : கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி ரயிலில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே கல்வீசிய இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கொல்லத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அனந்தபுரி ரயில் நேற்று முன்தினம் மாலை 5.55 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. சிறிது நேரத்தில் ரயில் இன்ஜின் அருகே கற்கள் வந்து விழுந்தது. அவை இன்ஜினில் படாவிட்டாலும் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டது பற்றி ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் அவர்களை துரத்தியபோது ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் தப்பிவிட்டார். பிடிபட்ட நபர் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த கணேஷ் 18 என்பது தெரிய வந்தது. நண்பர்களான இவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் கற்களை வீசியது தெரியவந்தது. தப்பி ஓடிய வெங்கடேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !