உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / டூவீலர் மீது மினி பஸ் மோதல் பள்ளி மாணவி பலி

டூவீலர் மீது மினி பஸ் மோதல் பள்ளி மாணவி பலி

நாகர்கோவில்:கன்னியாகுமரிமாவட்டம் சுசீந்திரம் அருகே டூவீலர் மீது மினி பஸ் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார். அவரது தந்தை, தம்பி படுகாயமடைந்தனர்.சுசீந்திரம் அருகே உத்தண்டன் குடியிருப்பை சேர்ந்தவர் தங்கமணி 54. மகள் கோடீஸ்வரி 14 ,மகன் புகழேந்திரன் 7. இருவரும் தனியார் பள்ளியில் படித்தனர்.நேற்று முன்தினம் மூவரும் டூவீலரில் நாகர்கோவில் -- பறக்கை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்ததில் கோடீஸ்வரி பலியானார். தங்கமணி மற்றும் புகழேந்திரன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி பஸ் டிரைவர் நாகர்கோவில் அருகுவிளையை சேர்ந்த அபினேஷ், 26 என்பவரை சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ