உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கணவரின் அன்பு குறைந்ததாக குழந்தையை கொன்ற தாய் கன்னியாகுமரியில் கொடூரம்

கணவரின் அன்பு குறைந்ததாக குழந்தையை கொன்ற தாய் கன்னியாகுமரியில் கொடூரம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலுாரை சேர்ந்தவர் ஏசுதாஸ். திருமணம் ஆன நிலையில் குழந்தைகள் இல்லாததால் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். பெனிட்டா ஜெய அன்னாள் என பெயரிட்டு கல்லுாரி வரை படிக்க வைத்தார். திண்டுக்கல் பகுதி கார்த்திக் என்பவருடன் இன்ஸ்டா காதல் ஏற்பட்டு திருமணம் நடைபெற்று திண்டுக்கல்லில் வசித்து வந்தனர். பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் கருங்கலில் வளர்ப்பு பெற்றோர் வீட்டில் பெனிட்டா இருந்தார். கணவர் அடிக்கடி வந்து பார்த்து சென்றார். நேற்று முன்தினம் வந்தபோது குழந்தை அசைவற்றுக் கிடந்தது. தனியார் மருத்துவமனைக்கு சென்றபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பெனிட்டா ஜெய அன்னாளை போலீசார் விசாரணை நடத்திய போது கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம்: திருமணத்தின்போது கணவர் காட்டிய அன்பு குழந்தை பிறந்த பின்னர் குறைந்ததாக எனக்கு தோன்றியது. இதனால் 42 நாள் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். டிஷ்யூ பேப்பரை குழந்தையின் வாயில் திணித்து மூச்சு திணற வைத்தேன். குழந்தை இறந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட பெனிட்டா இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ