உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய நேசமணி இன்ஸ்பெக்டர் கைது

ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய நேசமணி இன்ஸ்பெக்டர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ஆரல்வாய்மொழியில் வழக்கை ரத்து செய்ய ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய நேசமணி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாைஷ லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் வடக்குகோணத்தைச் சேர்ந்தவர் சந்தைராஜன். இவர் ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகியாக உள்ளார். இவர் மீது நேசமணி போலீஸ் ஸ்டேஷனில் அடிதடி வழக்கு உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய ரூ.3 லட்சம் லஞ்சம் தரும்படி இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் கேட்டார். சந்தைராஜன் முதற்கட்டமாக ரூ.1.85 லட்சத்தை இன்ஸ்பெக்டரிடம் வழங்கினார். ஆனால் மீதத்தொகையும் கேட்டு இன்ஸ்பெக்டர் அவரை வலியுறுத்தி வந்தார். இதனால் சந்தைராஜன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி நேற்றிரவு ஆரல்வாய்மொழியிலுள்ள அன்புபிரகாஷ் வீட்டில் வைத்து அவரிடம் சந்தைராஜன் மீத பணத்தை வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., எஸ்கால், இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை