மாணவிக்கு தொல்லை தலைமையாசிரியர் கைது
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தலைமையாசிரியர் ரமேஷ் குமார் 57, தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே தலைமையாசிரியரான ஆற்றுார் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தண்டாயுதபாணி விசாரணை நடத்தி தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார்.