மின் தடையால் காடை குஞ்சுகள் உயிரிழப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ஏற்பட்ட மின்தடையால், 400 காடை குஞ்சுகள் உயிரிழந்தன. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தேரேகால் புதுாரில், காடை குஞ்சு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின், 60 சதவீத நிதி மற்றும் மாநில அரசின், 40 சதவீத நிதி பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கு கோவையிலிருந்து, 4,000 காடை கோழி குஞ்சுகள் கொண்டு வரப்பட்டன. இது வளர்வதற்காக மூன்று அறைகளில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு, மின்சாரம் வருவதற்கு நீண்ட நேரமானது. இதனால் ஒரு அறையில் இருந்த, 400 காடை குஞ்சுகள் இறந்தன.