உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை புறப்பாடு

சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை புறப்பாடு

நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரத்திலிருந்து இன்று (செப்., 20) புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் தமிழக,- கேரள போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது. திருவிதாங்கூர் தலைநகர் பத்மனாபபுரத்தில் செயல்பட்ட போது நவராத்திரி விழா இங்கு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்திற்கு தலைநகர் மாற்றப்பட்ட பின்னர் பத்மனாபபுரத்திலிருந்து சரஸ்வதி தேவி மற்றும் வேளிமலை முருகன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னராட்சி மறைந்த பின்னரும் மரபு மாறாமல் இந்த விழா ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி புறப்படும் நிலையில் நேற்று காலை சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் பல்லக்கில் புறப்பட்டது. கோயிலில் இருந்து பல்லக்கில் தேவி எழுந்தருளியதும் தமிழக - கேரள போலீசார் துப்பாக்கியை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர். பின் மேளதாளம் முழங்க பவனி அங்கிருந்து சென்றது. இன்று காலை பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்படும். செப்., 22- மாலை திருவனந்தபுரம் சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !