உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்

கணவன் இறந்த சிறிது நேரத்தில் மனைவியும் இறந்த சோகம்

நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி கொண்டைக்கட்டியை சேர்ந்தவர் வித்யாசாகரன் 68. அப்பகுதி தனியார் பள்ளி காவலாளியாக பணிபுரிந்தார். மனைவி வசந்தா 60, மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். வித்யாசாகரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று உடல்நிலை மோசமானதை தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கணவரை காண மனைவி வசந்தா சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வித்யாசாகரன் இறந்தார். வசந்தா துக்கத்தால் அழுது கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அதே மருத்துவமனையில் இறந்தார். கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இறந்தது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ