மேலும் செய்திகள்
போலி பணி நியமன ஆணை வழங்கி ரூ. 15 லட்சம் மோசடி
24-Sep-2025 | 1
மார்த்தாண்டம்:ராஜிவ் கொலையாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி இளைஞர் காங்., சார்பில் விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட மூன்று பேரையும் தூக்கிலிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் ஐகோர்ட் தடை விதித்தது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்., தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.மூன்று பேருக்கும் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற கோரி விளவங்கோடு தொகுதி இளைஞர் காங்., சார்பில் விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொகுதி இளைஞர் காங்., தலைவர் பிரையர் பிரின்ஸ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயதரணி துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவின் உன்னத தலைவர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான கொலையாளிகளை காலம் கடத்தாமல் உடனே தூக்கில் போட வேண்டும். ஆனால் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படும். இதன் மூலம் தீவிரவாதம் வளரவும் வாய்ப்பு ஏற்படும். எனவே தூக்குத்தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் அஜிகுமார், குழித்துறை நகர தலைவர் கிங்ஸ்லி முல்லர், துணைத்தலைவர் ஜோசப் தயாசிங், நகர பொதுச்செயலாளர் அருள்ராஜ், இளைஞர் காங்., மாவட்ட முன்னாள் செயலாளர் ராஜேஷ்குமார், மேல்புறம் வட்டார தலைவர் ஜோதீஷ்குமார், இளைஞர் காங்., பிரதிநிதி நேசமெர்லின், துணைத்தலைவர் ஜாண்சுந்தர்சிங், தொழிலதிபர் தங்கப்பன், பஞ்., உறுப்பினர்கள் பாலு, ஸ்டீபன், பஞ்., தலைவர் ரவிசங்கர், மாவட்ட பஞ்., உறுப்பினர் சாலின், சிறுபான்மை அணி செயலாளர் எம்.ஏ.கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
24-Sep-2025 | 1