பைக் விபத்தில் இருவர் பலி
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நள்ளிரவில் பைக் ரேசிங்கில் ஈடுபட்ட கடற்படை வீரர் உட்பட 2 பேர் விபத்தில் சிக்கி பலியாகினர்.கருங்கல் அருகே பூட்டேற்றி சரல்விளையைச் சேர்ந்த விக்னேஷ் 25, கொச்சி கடற்படையில் வேலை செய்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவர் நேற்று முன்தினம் இரவு ஒளிப்பாறையில் உள்ள நண்பர் சுனிலை காணச் சென்றார். அவர் சுனிலை பைக்கில் அழைத்துக் கொண்டு ஒளிப்பாறையிலிருந்து கருங்கலுக்கு சென்ற போது பாளையங்கோட்டையில் இவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. பலத்த காயமுற்ற விக்னேஷ் சம்பவ இடத்தில் இறந்தார். சுனில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரும் இறந்தார். விபத்துக்கு காரணம் அதிவேகமா அல்லது ஏதாவது வாகனங்கள் மோதியதா என கருங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.