உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / புதருக்குள் மயக்கத்தில் கிடந்தபெண்: போலீஸ் விசாரணை

புதருக்குள் மயக்கத்தில் கிடந்தபெண்: போலீஸ் விசாரணை

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே புதருக்குள் ஆடையின்றி மயக்க நிலையிலிருந்த பெண்ணை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லங்கோடு அருகே மஞ்சத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பின் புதருக்குள் இருந்து பெண் ஒருவரின் முனகல் சத்தம் கேட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்ற போது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆடையின்றி மயக்க நிலையில் கிடப்பது தெரியவந்தது. பெண் போலீசார் வரவழைக்கப்பட்டு அப்பெண்ணுக்கு ஆடை அணிவித்து குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கணவருடன் சண்டையிட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தபோது தன்னை சிலர் கடத்தியதாகவும் சிறிது நேரத்தில் தான் மயங்கி விட்டதாகவும் போலீஸ் விசாரணையின் போது தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு முன்பாக மூவர் அப்பகுதியில் பைக்கில் சுற்றி வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக நித்திரவிளை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை