உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்

கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்

கரூர் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பாதையில் சிலாப் கற்களை உடைத்ததால் பயணியருக்கு சிரமம்கரூர்:கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு தினமும், நுாற்றுக்கணக்கான அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 30க்கும் மேற்பட்ட கடைகள், மாநகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.இதில், பஸ் ஸ்டாண்டின் பின்புறம் வழியாக அனைத்து பஸ்களும் வெளியில் செல்கின்றன. இதை ஒட்டியுள்ள பகுதியில், 10க்கும் மேற்பட்ட வணிக வளாகம் உள்ளது. அதற்கு இடையே மக்கள் வந்து செல்ல பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பயணிகள் பஸ் ஸ்டாண்ட் உள்ளே வந்து செல்கின்றனர். வணிக வளாகத்தை ஒட்டியுள்ள மழைநீர் கால்வாயில், துார் வாரும் பணியை நேற்று முன்தினம் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது வணிக வளாக கடைகளின் முன்புற கால்வாயின் மேல் உள்ள சிலாப் கற்களை அகற்றி விட்டு கால்வாயில் துார் வாரும் பணி நடந்தது. அப்போது, பயணியர் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் கான்கிரீட் சிமென்ட் சிலாப்பை உடைத்து விட்டு சென்றனர். இதனால், அந்த பாதையில் பயணியர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெளியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் உள்ளே செல்லும் பயணிகளுக்கு சிலாப் உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்து, மாற்று வழியில் செல்கின்றனர். ஆனால், பஸ் ஸ்டாண்ட் உள்ளே இருந்து வெளியில் வரும் பயணியருக்கு கான்கிரீட் சிமென்ட் சிலாப் உடைந்து இருப்பது தெரியாமல் பள்ளத்தில் தடுமாறி விழுகின்றனர். அதனால் சிலாப் கற்கள் பதித்து உடனடியாக பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை