உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நிரந்தரமாக மயானத்துக்கு இடம் வேண்டி மனுவுடன் திரண்டு வந்த பொது மக்கள்

நிரந்தரமாக மயானத்துக்கு இடம் வேண்டி மனுவுடன் திரண்டு வந்த பொது மக்கள்

குளித்தலை, : குளித்தலை, தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று மதியம், 12:00 மணியளவில் தமிழர் தேசம் கட்சி சார்பில், கள்ளை காலனியை சேர்ந்த பட்டியலின மக்கள் திரண்டு வந்து, தங்கள் பகுதிக்கு நிரந்தரமான மயானம் அமைக்க இடம் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். கள்ளை காலனியில், 300 பேர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, மயானம் வசதி இல்லாத காரணத்தால், 2 கி.மீ., துாரம் சென்று ஆற்று வாரியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. மேலும் மழை காலங்களில், வாரியில் தண்ணீர் வந்தால் கரையில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது.இப்பகுதி மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில், யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள அரசு இடத்தில் மயானம் அமைக்க இடத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி, கலெக்டர், குளித்தலை தாசில்தார், தோகைமலை யூனியன் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்துள்ளனர். மேலும், 2022ல், அளித்த மனுவின் மீது தோகைமலை யூனியன் கமிஷனர் மூலம் குளித்தலை தாசில்தாருக்கு, மயானம் அமைக்க நில அளவீடு செய்து ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக கள்ளை காலனி மக்களுக்கு, மயானம் அமைக்க இடம் ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி