காவிரி நீரை பெற ஓரணியில் திரள வேண்டும்காவிரி நீர் பாசன விவசாய சங்கம் வலியுறுத்தல்
காவிரி நீரை பெற ஓரணியில் திரள வேண்டும்காவிரி நீர் பாசன விவசாய சங்கம் வலியுறுத்தல்கரூர்,:கர்நாடகாவிடம் இருந்து, உரிய காவிரி நீரை பெறுவதில், அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என, காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேட்டூர் அணையில் ஜூன், 12ல், 100 அடி இருந்தால் மட்டுமே, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும் முடிவு நல்லதல்ல. ஏனெனில், தென்மேற்கு பருவ மழை பெய்து, கர்நாடகா அணைகள் நிரம்பவில்லை என்றால், நமக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் வரை தண்ணீர் திறக்கப்படுவதில்லை. இதனால், குறுவை சாகுபடி இல்லாமல் போய்விடுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நமக்கு தண்ணீர் திறப்பது கிடையாது.அவர்கள் வெள்ள வடிகால் போல நம்மை பயன்படுத்துவதால், சம்பா சாகுபடி பாதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆண்டுதோறும் நமக்கு ஒதுக்கீடு செய்த தண்ணீர் கிடைத்தால் மட்டுமே டெல்டாவின் குறுவை, தாளடி, சம்பா சாகுபடி விவசாயிகளை காக்க முடியும். எனவே கர்நாடகா, மாதந்தோறும் நீரை திறந்து விட வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்த வேண்டும். இந்த விஷயத்தில், அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டியது அவசியம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.