உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்த வாலிபர் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்த வாலிபர் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்த வாலிபர் கைதுகரூர்:கரூரில், அதிக வட்டி தருவதாக கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், பண மோசடி செய்த வாலிபரை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கரூர், பாரதி நகரை சேர்ந்தவர் பால முருகன், 36, தனியார் நிறுவன ஊழியர். இவரிடம், பெரம்பலுார் மாவட்டம், வி.களத்துரை சேர்ந்த பிரபு, 41, என்பவர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி கிடைக்கும் என கடந்த, 2021ல் கூறியுள்ளார். அதை நம்பிய பாலமுருகன், பிரபு இயக்குனராக இருந்த தனியார் நிதி நிறுவனத்தில், 20 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளார். ஆனால், பிரபு கூறியபடி வட்டி தரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பாலமுருகன், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, நிதி நிறுவன இயக்குனராக இருந்த பிரபுவை, நேற்று கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, கலைவாணன் என்பவரிடமும் பிரபு, 30 லட்ச ரூபாய் வரை பெற்று மோசடி செய்துள்ளார் என, குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.இதனால், பிரபுவின் வங்கி கணக்குகளை முடக்கவும், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி