மேலும் செய்திகள்
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் கல்யாண உற்சவம்
11-Oct-2024
கல்யாண வெங்கடரமண கோவிலில்இன்று வெள்ளி கருட வாகன ஊர்வலம்கரூர், அக். 20-தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவையொட்டி, இன்று வெள்ளி கருட வாகன ஊர்வலம் நடக்கிறது.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா மற்றும் கடந்த, 10 ல் திருக்கல்யாண உற்சவம், 12 ல் தேரோட்டம் நடந்தது.இன்று இரவு வெள்ளி கருட வாகனத்தில் உற்சவர் ஊர்வலம், வரும், 21ல் முத்து பல்லாக்கு, 22 ல் ஆளும் பல்லாக்கு, 23ல் வண்ண பூக்களால் வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
11-Oct-2024