உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஸ் டயர் வெடித்து விபத்து பெண் தொழிலாளி படுகாயம்

பஸ் டயர் வெடித்து விபத்து பெண் தொழிலாளி படுகாயம்

பஸ் டயர் வெடித்து விபத்து பெண் தொழிலாளி படுகாயம்அரவக்குறிச்சி:நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்தவர் சசிகுமார் மனைவி ரேவதி, 38; இவர், அரவக்குறிச்சி அருகே உள்ள ஜவுளி பூங்காவில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், டெக்ஸ்டைல் நிறுவன பஸ் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, பஸ்சின் பின் பக்க டயர் வெடித்தது. இதில் பஸ்சில் பயணித்த ரேவதி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை