உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆத்துப்பாளையம் அணை நிரம்ப வாய்ப்பு

தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆத்துப்பாளையம் அணை நிரம்ப வாய்ப்பு

தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆத்துப்பாளையம் அணை நிரம்ப வாய்ப்புகரூர், அக். 20-ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்வதால், அணை நிரம்புமா என்ற, எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன், கார்வாழி ஆத்துப்பாளையம் அணை, 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த, 2019ல் நிரம்பியது. இதையடுத்து, அப்போது பாசனத்துக்காக நொய்யல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு, 284 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மழை காரணமாக வினாடிக்கு, 234 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.48 அடியாக இருந்தது.கடந்த, 10 நாட்களாக தண்ணீர் வரத்து தொடர்வதால், ஆத்துப்பாளையம் அணை, விரைவில் நிரம்பும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை