உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெங்கடரமண சுவாமி கோவிலில் வெள்ளி கருட சேவையில் உற்சவர்

வெங்கடரமண சுவாமி கோவிலில் வெள்ளி கருட சேவையில் உற்சவர்

வெங்கடரமண சுவாமி கோவிலில் வெள்ளி கருட சேவையில் உற்சவர்கரூர்:தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திரு விழாவையொட்டி, உற்சவர் நேற்று வெள்ளி கருடசேவையில் அருள்பாலித்தார்.கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கட ரமண சுவாமி கோவிலில் கடந்த, 4ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் ஆகியவை நடந்து வருகிறது. நேற்று மாலை உற்சவர் வெள்ளி கருட சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வரும், 10ல் திருக்கல்யாண உற்வசம், 12ல் தேர்த் திருவிழா, 14ல் தெப்பத்தேர் உற்சவம், 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !