மேலும் செய்திகள்
படித்த பள்ளியிலேயே திருடிய சிறுவர்கள் கைது
02-Mar-2025
ரவுண்டானாவில் இருந்த தடுப்பு கம்பி அகற்றம்குப்பையாக கிடக்கும் திருக்குறள் இரும்பு பலகைகரூர்:கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, ரவுண்டானாவின் தடுப்பு அகற்றப்பட்ட நிலையில், அதில் இருந்த திருக்குறள் எழுதிய இரும்பு பலகை வீசப்பட்டுள்ளது.கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், ரவுண்டானா சீரமைப்பு பணி, 2020ல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ரவுண்டானாவை சுற்றிலும் திருக்குறள்களை எழுத வேண்டும் என்று, அப்போதைய கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார். ரவுண்டானா தடுப்பு கம்பிகளில் உள்ள இரும்பு பலகையில், திருக்குறளை மக்கள் படிக்கும் வகையில் எழுதப்பட்டு இருந்தது.தற்போது, ரவுண்டானாவில் உள்ள தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. அந்த கம்பிகளுடன் இரும்பு பலகையும், வளாகத்தில் ஒரு பகுதியில் குப்பை போல குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், திருக்குறள் எழுதி வைக்கப்பட்டுள்ள இரும்பு பலகை சேதமடைந்து வருகிறது. எந்த காரணத்திற்காக, ரவுண்டானா தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டன என தெரியவில்லை. மீண்டும் ரவுண்டானாவில் தடுப்பு கம்பி வைத்து, இரும்பு பலகையில் திருக்குறள் புதிதாக எழுத வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
02-Mar-2025