புகழூர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
புகழூர் மேல்நிலைப் பள்ளியில்நாட்டு நலப்பணித் திட்ட முகாம்கரூர், செப். 30-புகழூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா நடந்தது.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட தொடர்பு அலுவலர் யுவராஜா, என்.சி.சி., அலுவலர் பொன்னுசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ., வாங்கிலி, புகழூர் நடை பயிற்சி கழக செயலாளர் அண்ணா வேலு ஆகியோர் பேசினர். பின், பள்ளி வளாகத்தில் துாய்மை பணிகளை மாணவர்கள் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில், திட்ட அலுவலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.