மேலும் செய்திகள்
ஓட்டேரி அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகள்
12-Feb-2025
தார்ச்சாலை இல்லாத அரசு பள்ளிமாணவ, மாணவியர் கடும் அவதிகரூர்:கரூர் அருகே, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் மற்றும் தார்ச்சாலை இல்லாததால், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம் பஞ்சாயத்து, அரங்கநாதன் பேட்டையில், அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக, மண் சாலையாக உள்ளது. இதனால், மழை காலங்களில் மாணவ, மாணவியர், சேறு, சகதியில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், விவசாய நிலங்களில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் எளிதாக பள்ளி வளாகத்தில் உலா வருவதால், மாணவ, மாணவியர் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து, மாணவர்களின் பெற்றோர் பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அரங்கநாதன் பேட்டையில் செயல்பட்டு வரும், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தார்ச்சாலை வசதி மற்றும் சுற்றுச்சுவர் வசதியை ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
12-Feb-2025