வெங்கடரமண சுவாமி கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்கரூர்:தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்ப திருவிழாவையொட்டி, நாளை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.கரூர் அருகே, தான்தோன்றிமலை வெங்கட ரமண சுவாமி கோவிலில் கடந்த, 4ல் மாசிமக தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜை, அபிேஷகம் ஆகியவை நடந்து வருகிறது.நாளை மாலை, 4:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும் 12ல் தேர்த் திருவிழா, 14ல் தெப்பத்தேர் உற்சவம், 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.