தேசிய மூத்தோர் தடகள போட்டிதங்கம் வென்றவருக்கு பாராட்டு
தேசிய மூத்தோர் தடகள போட்டிதங்கம் வென்றவருக்கு பாராட்டுகரூர்:- தேசிய மூத்தோர் தடகள போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற கரூர் வீரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தேசிய மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மூத்தோருக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் நடந்தன. இதில், கரூரை சேர்ந்த ஆர்.எஸ். வையாபுரி, 84, என்பவர் 80 வயதுக்கு மேற்பட்டோர், 400 மீட்டா் ஓட்டத்தில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். இவருக்கு, பாராட்டு விழா கரூரில் திருக்குறள் பேரவை சார்பில் நடந்தது. பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் தலைமை வகித்து, வையாபுரிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். நிகழ் ச்சியில் திருக்குறள் பேரவையினர், தமிழறிஞர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.