உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உழவர் சந்தையில் மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு

உழவர் சந்தையில் மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் விற்பனை அங்காடி திறப்பு

உழவர் சந்தையில் மதிப்பு கூட்டப்பட்டபொருட்கள் விற்பனை அங்காடி திறப்புகரூர்:கரூர் உழவர் சந்தையில், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) நிர்மலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கரூர் உழவர் சந்தையில் சராசரியாக நாள்தோறும், 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் மூலம், 19 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்களை 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சத்தான மற்றும் தரமான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை வாங்கி, பொது மக்கள் பயன்பெறும் வகையில், கரூர் உழவர் சந்தையில் கடை அமைக்கப்பட்டுள்ளது.அதில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஊட்டி டீ துாள், வர்க்கி, நாட்டு சர்க்கரை, வாழைப்பழ நுாடுல்ஸ், வாழைப்பழ சாக்லேட், வாழைப்பழ பிஸ்கட், சிறுதானிய பிஸ்கட், சத்துமாவு, நவதானிய பொடி, உளுந்தங்கஞ்சி மாவு, தென்னை நீரா, பாரம்பரிய அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, துாயமல்லி, கைக்குத்தல் பொன்னி, கருடன் சம்பா உள்ளிட்ட பல பொருட்கள் கிடைக்கும். எனவே, கரூர் உழவர் சந்தையில் பொது மக்கள், பாரம்பரிய பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி