கரூரில் நாய் தொல்லை அதிகரிப்புசாலையில் செல்ல மக்கள் அச்சம்
கரூரில் நாய் தொல்லை அதிகரிப்புசாலையில் செல்ல மக்கள் அச்சம்கரூர்:-கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தெரு நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, சணப்பிரட்டி, இனாம்கரூர், குளத்துப்பாளையம், பசுபதி பாளையம், காந்திகிராமம் பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீடு திரும்புகின்றனர். பஸ் இறங்கி தங்கள் குடியிருப்புகளுக்கு நடந்து செல்லும்போது, தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் அவதிக்குள்ளாகின்றனர். தினமும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெறும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பள்ளி மாணவ, மாணவியர், தெருக்களில் விளையாடும் சிறுவர், சிறுமியர் அவ்வப்போது தெரு நாய்களால் கடிபட்டு வருகின்றனர். நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.