உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி

அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால் மக்கள் அவதி

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, ஷாநகர் பகுதியில் அதிகாலையில் குடிநீர் திறந்து விடுவதால், கடும் பனியில் வெளியே வர முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஷாநகர் பகுதியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிகாலை 4:00 மணியளவில் குடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.கடும் பனி நிலவுவதால், பொதுமக்கள் காலை, 7:00 மணிக்கு மேல் தான் வெளியே வருகின்றனர். இந்நிலையில் அதிகாலை, 4:00 மணியளவில் குடிநீர் திறந்து விடப்படுவதால் குடிநீர் வருவது கூட தங்களுக்கு தெரியவில்லை என ஷாநகர் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மேலும் நகராட்சி நிர்வாகம், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாலையில் குடிநீர் திறந்து விடாமல் காலை, 7:00 மணிக்கு மேல் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.**************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை