உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அய்யர்மலை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்

அய்யர்மலை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்

அய்யர்மலை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம்குளித்தலை, :கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில், கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. மழை காலங்களில், மலை உச்சியில் இருந்து பெய்யும் மழை நீர், படிக்கட்டுகள் வழியாக தெப்பக்குளத்திற்கு வந்து சேரும் வகையில், வடிவமைத்துள்ளனர். மேலும், மலையை சுற்றி தென்பகுதி, மேற்கு பகுதியில் பெய்யும் மழை நீரும், தெப்பக்குளம் வரும் வகையில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு மேலாக தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர், தெப்பக்குளத்தில் கலப்பது போல் வடிகால் அமைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மேலாக கழிவு நீர் முழுவதும், தெப்பக்குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசியும், மீன்கள் இறந்து மிதந்து வருகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், மூக்கை மூடியபடி சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் தங்கராஜீ கூறுகையில், ''தெப்பக்குளத்தில் துர்நாற்றம் வீசுவது அறிந்து, தண்ணீரில் மிதந்த கழிவுகள் அகற்றப்பட்டது. அருகில் வாரச்சந்தை நடப்பதால் தேவையில்லாத காய்கறிகளை தெப்பக்குளத்தில் வீசி செல்கின்றனர். மேலும், கழிவு நீர் வடிகால் கழிவு நீர் தெப்பகுளத்தில் கலக்கிறது. இதுகுறித்து, மாவட்ட பஞ்.,நிர்வாகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்து, கழிவு நீர் வடிகால் முற்றிலும் தடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி