உதவி பேராசிரியர் மாயம் மனைவி போலீசில் புகார்
உதவி பேராசிரியர் மாயம் மனைவி போலீசில் புகார்குளித்தலை: குளித்தலை அடுத்த தரகம்பட்டியை சேர்ந்தவர் பிரேமா, 32; இவரது கணவர் கார்த்திக், 38; திருச்சி பாவேந்தர் பாரதிதாசன் பல்கலையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 29ல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிச்சென்றார்.மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பிரேமா கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.