உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் விபத்து அபாயம்

வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் விபத்து அபாயம்

வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் விபத்து அபாயம்கரூர் :வேலாயுதம்பாளையம் அருகே, வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதியில், மருத்துவமனைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்நிலையில், கந்தம்பாளையம் பகுதியில், சாலையையொட்டி வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை டிரைவர்கள், பல மணி நேரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். மேலும், கந்தம்பாளையம் பகுதி அரசு மற்றும் தனியார் பஸ்கள், சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடுடன் டிராக்டர்களும் அந்த வழியாக செல்கின்றன. இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, கந்தம்பாளையம் பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல், மாற்று இடம் தேர்வு செய்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் வேலாயுதம்பாளையம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை