டில்லி சட்டசபை தேர்தல் வெற்றி: பா.ஜ., கொண்டாட்டம்
டில்லி சட்டசபை தேர்தல் வெற்றி: பா.ஜ., கொண்டாட்டம்கரூர், :டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளதை, கரூரில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், மனோகரா ரவுண்டானாவில் கரூர் மாவட்ட பா.ஜ., சார்பில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். 27 ஆண்டுகளுக்கு பிறகு, டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை வென்று பா.ஜ., ஆட்சி அமைக்கிறது.மாவட்ட பொதுச்செயலர்கள் ஆறுமுகம், சக்திவேல் முருகன், மாவட்ட செயலர் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், கரூர் மேற்கு மாநகர தலைவர் பவானி துரை பாண்டியன், பரமத்தி வடக்கு ஒன்றிய தலைவர் செல்வி பழனிசாமி, தான்தோன்றிமலை கிழக்கு ஒன்றிய தலைவர் பாலுசாமி, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய தலைவர் லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.