உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்நலத்திட்ட உதவிகள் வழங்கல்குளித்தலை: குளித்தலை ஊரக பகுதியில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், நெய்தலுார் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ, ஆர்.டி.ஓ., கருணாகரன், தாசில்தார் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், அரசின் சாதனைகள் குறித்து பேசினார். இதையடுத்து தாட்கோ, கூட்டுறவு, பொது மருத்துவ துறை சார்பில், பயனாளிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின், பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தோகைமலை முன்னாள் யூனியன் குழு தலைவர்கள் சுகந்திசசிகுமார், பிச்சை, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, பஞ்., தலைவர் வேலாயுதம், மாவட்ட பிரதிநிதி சந்திரன் மற்றும் அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் புத்துார், காவல்காரன்பட்டி, பொருந்தலுார், கழுகூர் ஆகிய இடங்களில் நடந்த முகாமில், அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை