சிறுபாலம் இணைப்பு சாலையில்சிலாப் கற்கள் அமைக்கும் பணி
சிறுபாலம் இணைப்பு சாலையில்சிலாப் கற்கள் அமைக்கும் பணிகரூர்:கரூரில், சாலையின் குறுக்கே சிறு பாலம் கட்டிய இடங்களில், சிலாப் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது.கரூர்-வெள்ளியணை சாலை, முத்துலாம்பட்டி பிரிவு சாலையின் குறுக்கே, சில மாதங்களுக்கு முன் சிறுபாலம் கட்டப்பட்டது. அப்போது, கான்கிரீட் அமைக்க இரும்பு கம்பிகள் போடப்பட்டது. மேலும், இணைப்பு சாலையில் போடப்பட்ட, தரமற்ற சிமென்ட் ஜல்லி கற்கள், சமீபத்தில் பெய்த மழையால் சிதறி கிடந்தன.அப்போது, சிதறிய ஜல்லி கற்களால் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, கரூர்-வெள்ளியணை சாலை முத்துலாம்பட்டி பிரிவில், சாலையின் குறுக்கே உள்ள, சிறு பாலத்தில், சிலாப் கற்கள் அமைக்கப்பட்டுள்ளது.