உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில்சர்வதேச பெண்கள் தினக்கூட்டம்

சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில்சர்வதேச பெண்கள் தினக்கூட்டம்

சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில்சர்வதேச பெண்கள் தினக்கூட்டம்கரூர்:சுவாதி பெண்கள் இயக்கம் சார்பில், 35வது சர்வதேச பெண்கள் தினக்கூட்டம், தலைவர் இளவரசி தலைமையில், வீரராக்கியத்தில் நடந்தது. அதில், தமிழகத்தில் சமீப காலமாக பெண் குழந்தைகள் மீது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. கடந்த, 2012 முதல், 2022 வரை, 22,829 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8,000 வழக்குகள் மீது விசாரணை நடக்கிறது. போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து விசாரித்து, தண்டனை வழங்க வேண்டும். பள்ளியில் பாலியல் வன்முறை நடந்த, அந்த ஆசிரியரின் கல்வி சான்றை ரத்து செய்து, பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சுய ஆட்சி இந்தியா அமைப்பின் தலைவர் கிறிஸ்டினா, துணைத்தலைவர் பாக்கியம், பொருளாளர் மஞ்சுளா, நிர்வாக குழு உறுப்பினர் லீலாவதி, காஞ்சனா, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த கேத்ரின், லேனா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை