உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஏரியில் கொட்டி எரிக்கப்படும்பிளாஸ்டிக் குப்பையால் காற்று மாசு

ஏரியில் கொட்டி எரிக்கப்படும்பிளாஸ்டிக் குப்பையால் காற்று மாசு

ஏரியில் கொட்டி எரிக்கப்படும்பிளாஸ்டிக் குப்பையால் காற்று மாசுதர்மபுரி:தர்மபுரி அருகே, செட்டிகரை பஞ்., உள்ளது. இதில், தர்மபுரி - அரூர் தேசிய நெடுஞ்சாலை அருகேவுள்ள செட்டிகரை ஏரி, 12.56 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. கடந்த, 2019ல் தமிழக நிர்வாக பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பில், 7.92 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிமராமரத்து பணிகள் செய்யப்பட்டது. அதன் பிறகு ஏரியில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்., பகுதியில் சேகரிக்கப்படும் மக்காத பிளாஸ்டிக் குப்பையை ஏரியில் கொட்டி தினமும் எரிக்கப்படுகிறது. இதனால், சுற்றுவட்டாரத்தில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து, உரம் மற்றும் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு அனுப்புவதை தவிர்த்து, ஏரியில் கொட்டி எரிப்பது தொடர்கிறது.பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால், அதன் பாதிப்பு, நீர் தேங்கும் ஏரி பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் ஏற்படுகிறது. எனவே, குப்பை எரிப்பதை தவிர்த்து தரம் பிரித்து, மறுசுழற்சி செய்ய, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை