உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா

புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா

புலியூர் அம்பேத்கர் நகரில் தார்ச்சாலை அமைக்கப்படுமா கரூர்கரூர் அருகே, புலியூர் டவுன் பஞ்சாயத்தில், அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து திருச்சி சாலைக்கு செல்ல, அரை கிலோ மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டும். இந்த குண்டும், குழியுமான மண் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கரூர்-திருச்சி சாலையில் இருந்து, புலியூர் அம்பேத்கர் நகர் செல்லும் சாலை, பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. நடந்து செல்ல முடியவில்லை. இதுகுறித்து, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இதனால், அம்பேத்கர் நகரில் வசிக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் மழைக்காலத்தில் பெரும் அவதிப்படுகின்றனர். விரைவில் அம்பேத்கர் நகருக்கு, செல்லும் மண் பாதையில் தார்ச்சாலை அமைத்து, மின் விளக்கு வசதிசெய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி