கல்லீரல் சிகிச்சைக்கு உதவ கோரிகரூர் கலெக்டரிடம் பெண் மனு
கல்லீரல் சிகிச்சைக்கு உதவ கோரிகரூர் கலெக்டரிடம் பெண் மனுகரூர்:கல்லீரல் பாதிப்பு சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் என, காசிபாளையம் ஜோதி, 36, கரூர் கலெக்டரிடம் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகில் காசிபாளையத்தில் வசித்து வருகிறேன். நான் கல்லீரல் செயலிழப்பு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதால், இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன். என் கணவர் சலவை தொழிலாளியாக இருப்பதால், தொடர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. தற்போது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட போது, நுரையீரலில் நீர் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மற்றும் ஒரு மாத காலம் தொடர் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கு, 25 லட்சம் ரூபாய் வரை செலவாகும். குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல், 2 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வருகிறேன். இந்த சூழ்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.