உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்றவர் பலிகரூர்:வேலாயுதம்பாளையம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் சென்றவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பாபு, 41; இவர் நேற்று முன்தினம் மாலை, கரூர்-ஈரோடு சாலை முத்துநகர் பிரிவு பகுதியில், ஹீரோ கிளாமர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், பாபு மீது மோதியது. அதில், கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு, பாபு உயிரிழந்தார். இதுகுறித்து, பாபுவின் மனைவி வேணி, 32, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ