மேலும் செய்திகள்
மக்களுக்காக போராடினால் கைது தான் திமுக முடிவா?
18-Mar-2025
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்புகரூரில் குடையுடன் செல்லும் மக்கள்கரூர், கரூரில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் குடையுடன் செல்கின்றனர்.தமிழகத்தில், கோடை காலம் தொடங்கிய நிலையில் திருப்பத்துார், ஈரோடு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் நாள்தோறும், 100 டிகிரியை தாண்டிய நிலையில்உள்ளது. அதேபோல், கரூர் மாவட்டம், பரமத்தியில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை, 11:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள், கோடை வெயிலில் இருந்து, தப்பிக்கும் வகையில் குடையுடன் வலம் வர தொடங்கியுள்ளனர்.குறிப்பாக முதியவர், பெண்கள், சிறுவர், சிறுமியர் குடையுடன் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கரூர் நகரில் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக குடை விற்பனை செய்யும் கடைகள் தோன்றியுள்ளன. 100 முதல், 250 ரூபாய் வரை குடைகள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கரூர் நகரை சுற்றி செல்லும், மதுரை, சேலம், திருச்சி, கோவை ஆகிய நெடுஞ்சாலைகளிலும், குடைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
18-Mar-2025