கரூரில் குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
கரூரில் குண்டும், குழியுமான சாலைவாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிகரூர்:கரூர் மாநகராட்சி, 80 அடி சாலை காமராஜபுரம் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோவில்கள், மருத்துவமனைகள், ஜவுளி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன. அந்த வழியாக, பொதுமக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட, பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.இந்நிலையில், காமராஜபுரம் சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள், தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். இதனால், காமராஜபுரத்தில் குண்டும், குழியு மாக உள்ள சாலைகளை, சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.