மேலும் செய்திகள்
கொசு ஒழிப்பு பணி தீவிரம்
15-Dec-2024
கிருஷ்ணராயபுரம்,: புனவாசிப்பட்டி கிராமத்தில், பொசு சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட புனவாசிப்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. வீடுகளில் கழிவு நீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, நல்ல குடிநீர் மூடி வைத்தல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறிந்து அகற்றுதல், சாலையோரம் குப்பை அகற்றுதல், குடிநீர் தொட்டி பராமரிப்பு ஆகிய பணிகள் செய்யப்பட்டது. இந்த பணிகளில் மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை சுகாதார ஆய்வாளர் குழுவினர் பார்வையிட்டனர்.
15-Dec-2024