திரவுபதி அம்மன் கோவில்கரகம், பல்லக்கு உற்சவம்
திரவுபதி அம்மன் கோவில்கரகம், பல்லக்கு உற்சவம்ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தேர்ப்பேட்டையிலுள்ள திரவுபதி சமேத தர்மராஜ சுவாமி கோவில் கரகம் மற்றும் பல்லக்கு உற்சவம் கடந்த, 9 மாலை கொடியேற்றுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்து வந்தன. கடந்த, 12ல் திரவுபதி சமேத தர்மராஜ சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 15 இரவு, கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு ராமநாயக்கன் ஏரிக்கு சென்றது. அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு பச்சை கரகம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக சென்றது.நேற்று முன்தினம் மாலை, திகிலர்பேட்டை எல்லம்மன் கோவிலில் இருந்து, பெண்கள் மாவிளக்கு ஏந்தி, திரவுபதி சமேத தர்மராஜ சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். நேற்றிரவு கோவிலில் இருந்து பூக்கரகம் புறப்பட்டு, நேதாஜி ரோடு, எம்.ஜி., ரோடு, திகிலர் பேட்டை, ஜெனப்பர் தெரு, பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.