நெடுஞ்சாலையில் வேகத்தடை பெரியதாக இருப்பதால் அவதி
நெடுஞ்சாலையில் வேகத்தடை பெரியதாக இருப்பதால் அவதிகிருஷ்ணராயபுரம் :பஞ்சப்பட்டியில், சாலை நடுவில் அமைக்கப்பட்ட வேகத்தடை பெரியதாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி - மைலம்பட்டி நெடுஞ்சாலை நடுவில், பெரிய அளவிலான வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக செல்லும் போது, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள், பெரிய வேகத்தடையில் ஏறி இறங்கும் போது, தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையை, சிறியதாக அமைத்து வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், வெள்ளை வண்ணம் அடிக்க வேண்டும்.