உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூரில் குடிநீர் குழாய்களைசேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு

கரூரில் குடிநீர் குழாய்களைசேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு

கரூரில் குடிநீர் குழாய்களைசேதப்படுத்தியவர்கள் மீது வழக்குகரூர்:கரூர் அருகே, குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் மாவட்டம், வெங்கமேடு தில்லை நகர், முதலாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல், 38; இவர் உள்பட பலர், வெங்கமேடு வி.வி.ஜி., நகரில், மாநகராட்சி தரப்பில் சீரமைக்கப்பட்ட, குடிநீர் குழாய்களை சேதப்படுத்தியுள்ளனர். இதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்.இதுகுறித்து, கரூர் மாநகராட்சி முதலாவது மண்டல பிட்டர் தங்கவேல், 46, போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து கதிர்வேல் உள்பட, பலர் மீது வெங்கமேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை