சிந்தலவாடி பஞ்சாயத்தில்சிமென்ட் சாலை படுமோசம்
சிந்தலவாடி பஞ்சாயத்தில்சிமென்ட் சாலை படுமோசம்கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் யூனியன் பஞ்சாயத்துக்குட்பட்ட சிந்தலவாடி பஞ்சாயத்து பகுதியில் உள்ள வார்டுகளில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிந்தலவாடி மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து, புற்றுக்கோவில் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், தடுமாறியபடி தினந்தோறும் பயணித்து வருகின்றனர்.மழை காலத்தில் சாலையில் பள்ளம் இருப்பதே தெரியாமல் கீழே விழும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. பள்ளி, கல்லுாரி வாகனங்கள் சில நேரம் பழுதாகி நிற்கின்றன. எனவே, படுமோசமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.