உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அழுகிய நிலையில்ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில்ஆண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில்ஆண் சடலம் மீட்புகுளித்தலை:குளித்தலை, மணப்பாறை நெடுஞ்சாலையில் கோட்டைமேடு மூன் நகரில், விவசாய நிலத்தின் பாசன கண்ணாறில் சிறிய பாலத்திற்கு இடையே, 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க விலாசம் தெரியாத ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. நேற்று மதியம், 3:00 மணியளவில் குளித்தலை போலீசார், முசிறி தீயணைப்பு துறையினர் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை யாராவது கொலை செய்து போட்டு விட்டு சென்றனரா அல்லது மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா என, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி